ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்! ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான தீர்ப்பு இன்று வெளியானது.

ஜம்மு காஷ்மீர்க்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.

“சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு இடைக்கால செயல்முறையை முடிக்க உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் நிலவும் போர் சூழல் காரணமாக இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இது ஒரு தற்காலிக ஏற்பாடு, எனவே இது அரசியலமைப்பின் 21 வது பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இணைவதில் கையெழுத்திட்ட பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு உள் இறையாண்மை இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30க்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பு.

Leave a Comment