நடிகர் விஜயகாந்த் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

நடிகர் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவர் இன்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

 

Leave a Comment