நடிகர் விஜயகாந்த் காலமானார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவர் இன்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவை முன்னிட்டு திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு … Read more

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்! ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான தீர்ப்பு இன்று வெளியானது. ஜம்மு காஷ்மீர்க்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீருக்கும் தனி இறையாண்மை கிடையாது என்று உச்ச நீதிமன்ற … Read more