தேர்வு இல்லாமல் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! Any Degree போதும்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சார்பில், தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹12,750 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 16.10.2026க்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

🏷️ விவரம் 📌 தகவல்
🏢 நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
📂 வகை தமிழ்நாடு அரசு வேலை
💼 பதவி வட்டார ஒருங்கிணைப்பாளர் (பெண்கள் மட்டும்)
🔢 காலியிடங்கள் 22
💰 சம்பளம் ₹12,750 / மாதம்
🎓 கல்வித் தகுதி ஏதேனும் இளங்கலைப் பட்டம் + குறைந்தது 3 மாத MS Office கணினி சான்றிதழ் அல்லது Computer Science / Computer Application-ல் இளங்கலைப் பட்டம்
💻 கணினி தகுதி கணினி மென்பொருள் சார்ந்த கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை
🏍️ கூடுதல் தகுதி இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்
🧑‍💼 அனுபவம் மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்
🎂 வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை
👩 பாலினம் பெண்கள் மட்டும்
📍 பணியிடம் தூத்துக்குடி மாவட்டம்
🏠 குடியிருப்பு தூத்துக்குடி மாவட்டத்தில், காலிப்பணியிட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்
💳 விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை
📝 தேர்வு முறை நேர்காணல்
📅 விண்ணப்ப தொடக்கம் 26.09.2026
⏰ கடைசி தேதி 16.10.2026 மாலை 5.45 மணி
📮 விண்ணப்ப முறை நேரில் / பதிவு தபால்
📄அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
📝விண்ணப்ப படிவம் Download
🌐அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளின் நகல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியரகம் (இரண்டாம் தளம்),
கோரம்பள்ளம் – 628101,
தூத்துக்குடி மாவட்டம்.

கடைசி நேரம்: 16.10.2026 மாலை 5.45 மணி

தேவையான சான்றுகள்

  • கல்வித் தகுதி சான்று
  • இருப்பிடச் சான்று
  • ஜாதி சான்று
  • நன்னடத்தைச் சான்று
  • கணினி பயிற்சி சான்று
  • முன்னுரிமை சான்று (தேவைப்பட்டால்)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, கல்வித்தகுதி, வயது வரம்பு, 5 ஆண்டுகள் அனுபவம், இருசக்கர வாகன உரிமம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment

❯